பயிர் பாதுகாப்பு கருவிகள் :: செயலாற்றும் முறை

வேலைசெய்யும் விதம்

  • தெளிக்க வேண்டிய திரவத்தை பலவித ஆற்றல்களைக் கொண்டு சிறு துளிகளாக மாற்றப்படுகிறது.
  • பலவகையான இயற்கை ஆற்றல்களான, நீரியல், வாயு மற்றும் மையநோக்கு விசை போன்றவை உபயோகப்படுத்தப்படுகிறது.
  • தெளிப்பான்கள் மற்றும் தெளிப்புமுனைகள் போன்றவை ஆற்றல் பயன்பாட்டினைப் பொருத்து வேறுபடுகிறது.

நீரியல் ஆற்றல்

  • தலைகீழாக இயங்கும் பம்பு இயந்திர ஆற்றல் மூலம் இயக்கப்படுகிறது.
  • இதன் மூலம் உருவாகும் அழுத்தமானது திரவத்தை தெளிப்புமுனை வழியே வெளியே உதவுகிறது.
Hydraulic Energy

வாயு ஆற்றல்

  • ஊதுகுழலானது அதிக வேகமுடைய காற்றினை உருவாக்குகிறது.
  • திரவமானது சிறு துளிகளாக வெளித்தள்ளப்படுகிறது.
Gaseous energy

மையநோக்கு ஆற்றல்

  • அதிவேகமான சுழலும் தட்டு இதற்கு உதவுகிறது.
Centrifugal energy

தெளிப்பு அளவு
குறைப்பிட்ட பரப்பளவில் தெளிப்பதற்கு தேவையான திரவத்தின் (நீரின்) அளவே தெளிப்பு அளவாகும்.
பொதுவான முறைகள்

  • இடம் மாற்றும் களைகெல்லிகளுக்கு, ஒரு சதுர செ.மீ-க்கு 5 முதல் 10 துளிகள்.
  • பூச்சிக்கொல்லி மற்றும் அமைப்பு சார்ந்த பூசாணக்கொல்லிகளுக்கு ஒரு சதுர அடிக்கு 20 துளிகள்
  • அமைப்பு சாரா பூசாணக்கொல்லிகளுக்கு, ஒரு சதுர செ.மீக்கு 50 முதல் 70 துளிகள்
  • பூச்சிக்கொல்லிகளில் திருப்திகரமான உயிர் விளைவு ஏற்பட வேண்டுமெனில் ஒரு சதுர செ.மீ-க்கு எந்தவொரு அளவாக இருப்பினும் 20 துளிகள் தேவை.
  • தெளிக்கும் திரவத்தின் அளவானது கணக்கிடப்பட்ட அளவினை விட எப்போதும் அதிகமாகவே இருக்கும், இதற்கு காரணம் என்னவெனில் காற்றில் கலக்கும் அளவு மற்றும் தேவைப்படாத இடத்தில் தெளிப்பதும் ஆகும்.

தெளிப்பு திறனை கீழ்கண்டவாறு கணக்கிடலாம்,

                                     தேவைப்படும் குறைந்த பட்ச தெளிப்பு திரவம்
  தெளிப்பு திறன் (%) =        X 100 % 
                                     தேவைப்பட்ட தெளிப்பு திரவம்

தெளிக்க வேண்டிய இடம்

  • பூச்சிகள், களைகள் மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளன இடங்களைப் பொறுத்து மாறுபடலாம்.
  • பயிர்களுக்கிடையேயான இடைவெளி மற்றும் பயிரின் வளர்ச்சி இவற்றினைப் பொறுத்து தெளிக்கும் பரப்பளவு மாறுபடலாம்.

தெளிப்பு திரவத்தை கணக்கிடுதல்

  • சீராக திரவத்தை தெளிப்பதற்கு, தேவையான அளவை கணக்கிடுதல் முக்கியமாகும்.
    மாறிலி 495   (அ) 600 பிரிட்டிஷ் மெட்ரிக் x தெளிப்பு முனையின் தெளிக்கும் திறன் (லிட்டர் நிமிடம்)
தெளிக்கும் அளவு (லிட்டரில்) ஒரு ஏக்கர் (அ) ஹெக்டேருக்கு   = ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    மருந்து வீசம் அகலம் (அடி அல்லது மீட்டர்) x தெளிக்கும் வேகம் (மைல் (அ) கீ.மி மணி)

   
எனினும், விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ள பரப்பளவு கொள்ளளவு கொண்டும் கணக்கிடலாம்.

தெளிக்கும் திறன் லிட்டர்  / ஏக்கர் அல்லது ஹெக்டர் =

    பரப்பளவு
 
தெளிக்க வேண்டிய பரப்பளவு

x

தெளிக்க வேண்டிய பரப்பளவில் தெளிக்கப்பட்ட திரவத்தின் அளவு

தெளிப்பு துளிகள்

  • பூச்சிக்கொல்லிகள் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் துளிகளாக தெளிக்கப்படுகிறது.  இந்த துளிகளை தயார் செய்யும் நீரியல் தெளிப்பு முனைகள் சீரான அளவில் இருப்பதில்லை.
  • தெளிப்பு துளிகள் நேர்த்தியானது நேர்த்தியற்ற வகையில் அவற்றின் விட்டம்  மற்றும் தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அடர்த்தியைப் பொறுத்து மாறுபடும்.

நேர்த்தியற்ற துளிகள்

  • குறுகிய அகலம் மட்டும் தெளிக்கலாம்
  • குறைந்த அளவே இலையில் அடிப்புறம் தெளிக்கலாம்
  • அதிகமான தெளிப்பு திரவம் தேவைப்படும்
  • துகள்கள் ஒட்டாமல் அடித்து செல்லப்படும்
  • பயிரில் குறைந்த அளவே ஊடுரும்
  • காற்று மற்றும் வெப்பத்தினால் இழப்பிருக்காது
  • உயிர் விளைவு மிகக் குறைவு
  • மழையைப் போன்ற தெளிப்பு முறை

நேர்த்தியான துளிகள்

  • அதிக அகலம் தெளிக்கலாம்
  • இலையில் அடிப்பரப்பில் அதிகமாக தெளிக்கலாம்
  • குறைந்த அளவு திரவம் தேவைப்படும்
  • துகள்கள் ஒட்டிக்கொண்டு அடித்துச் செல்லப்படுவதில்லை
  • பயிரில் அதிகளவு ஊடுருவும்
  • காற்று மற்றும் வெப்பத்தினால் அதிக இழப்பு
  • அதிகளவிளலான உயிர் விளைவு
  • மூடுபனி போன்ற தெளிப்பு முறை

சராசரி தொகுப்பின் விட்டம்
சராசரி தொகுப்பின் விட்டம் என்பது தேவைப்படும் திரவத் தொகுப்பினை திரவத்துளியின் விட்டத்தால் சரியாக இரண்டாக வகுப்பது ஆகும்.  அதாவது சராசரி தொகுப்பின் விட்டத்தினை விட குறைந்த விட்டத்தினைக் கொண்டதெளிக்கும் திரவத்தின் துளியின் அளவானது அதிக விட்டத்தினைக் கொண்ட தெளிக்கும் திரவத்தின் துளிக்கு சரிசமமாக இருக்கும்.
உகந்த துளியின் அளவு

  • துளி வெளியேற்றப்படும் போது அதன் திசைவேகம்
  • புவி ஈர்ப்பு விசை
  • காற்றின் திசைவேகம்
  • வெப்ப மாறுபாட்டினால் காற்றின் வேக மாறுபாடு
  • துளியின் ஆவியாகும் தன்மை
  • தெளிக்கப்படும் பரப்பின் தன்மை
  • சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமலிருக்க துளியின் அளவு மிக முக்கியம்.  500 மைக்ரான் அளவுள்ள துளியானது 50 மைக்ரான் அளவுள்ள துளியை விட 1000 மடங்கு உயிர்கொல்லி அளவினைக் கொண்டிருக்கும்

இலக்கு

துளியின் அளவு (மைக்ரானில்)

பறக்கும் பூச்சிகள் 10-50
இலைகளின் மேலுள்ள பூச்சிகள் 30-50
இலைகளின் மேல் 40-100
மண்ணில் இடுதல் (காற்றில் பரவுவதை தடுக்க) 250-500
  • பல்வேறு தெளிக்கும் உத்திகளான அதிக தொகுப்பு, குறைந்த தொகுப்பு, அதிதீவிர குறைந்த தெளிப்பு போன்றவை நடைமுறையில் உள்ளன.
  • 300 மைக்ரானுக்கு அதிகமுள்ளவை துளிகளாக விழுந்தும், 100 மைக்ரானுக்கு குறைவானவை காற்றின் நீரேட்டத்திலும் வீணாகின்றன.  இது அதிக தொகுதி மற்றும் தீவிர குறைந்த தொகுதி இரண்டிலும் ஏற்படுகிறது.

இலைப்பரப்பு குறியீடு
இலைப்பரப்பு குறியீடு என்பது இலைப்பரப்பிற்கும் நிலப்பரப்பிற்குமான விகிதம் ஆகும்.

இலைப்பரப்பு குறையீடு

=

இலைப்பரப்பு
நிலப்பரப்பு
  • இலைப்பரப்பு குறையீடானது ஒவ்வொரு பயிர்களுக்கும் அவற்றின் வளர்ச்சியைப் பொருத்து மாறுபடும்.   சிலசமயங்களில் இது 7 என்ற குறியீட்டை விட அதிகமாகவும் இருக்கலாம்.
  • இதனால் தான் ஒவ்வொரு பயிருக்கு அதன் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப தெளிக்க தேவைப்படும் திரவத்தின் அளவு மாறுபடுகிறது.

ஒரு லிட்டர் பூச்சிக்கொல்லியை 1 ஒரு ஹெக்டர்   பரப்பிற்கு மேல் தெளிக்க தேவையான தோராயமான துளியின் அடர்த்தி (சீரான மற்றும் இலக்குகளின் மீது மட்டும் தெளிக்கும் போது)


துளியின் அடர்த்தி

ஒரு சதுர செ.மீக்கான துளியின் அடர்த்தி இலைப்பரப்பு குறியீடு 1 முதல் 7 வரை உள்ள போது

  1 2 3 4 5 6 7
10 19100 9550 6364 4773 3818 3182 2717
20 2380 1190 795 596 477 398 341
50 153 77 51 38 31 26 22
100 19 9.5 6 5 4 3.2 2.7
200 2.4 1.2 0.8 0.6 0.5 0.4 0.3
400 0.3 0.15 0.1 0.08 0.06 0.05 0.04
  • இலையின் மேல் மற்றும் கீழ் பரப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் துளியின் அடர்த்தி ஒரு சதுர செ மீக்கு பாதியாகும்
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016